வியாழன், 20 செப்டம்பர், 2012

குடியை நிறுத்த முடியும் [ மந்திரத்துடன்]

தலைப்பு:கடவுள் சொன்ன தகவல்
கருத்து: சொல்கிற தகவலின் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்

ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பயணம் சென்று கொண்டிருந்தார் ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார் அந்த சந்நியாசி. இரண்டு கால்கள் உடைந்துபோன ஒரு நொண்டி நரியை அங்கே கண்டார். ‘ஐயோ, உணவுக்கு இந்த நரி என்ன செய்யும்!’ என்று கவலைப்பட்டார்.
அப்போது, சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய இறைச்சியை இழுத்து வந்து நரியின் அருகில் போட்டது. கடவுள் அவருக்கு தகவல் சொன்னது போல் இருந்தது.
தனக்கான உணவு கிடைக்க வேண்டுமானால், அதை எப்படியும் தெய்வம் கிடைக்கச் செய்யும் என்று முடிவு செய்தார். உணவு தேடுவதை விடுத்து, கடவுளை நினைத்து ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டார்.
நாட்கள் கடந்தன. பசி வயிற்றைக்கிள்ளியது. யாரும் அவருக்கு உணவு கொண்டு தரவில்லை. சிறிது நாட்களில் தன்னுடைய சக்தி எல்லாம் இழந்தார். பரிதாபமாகச் சுருண்டு
மயங்கி விழுந்தார்.கட்வுள்
அந்தப் பக்கமாக ஒருயோகி வேடத்தில் வந்தார்.என்ன நடந்தது நடந்ததை விசாரித்து அறிந்தார்.
”கடவுள் உனக்கு ஒரு தகவல் சொன்னது உண்மைதான். ஆனால், மற்றவருடன் உணவைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிங்கம் போல் வாழச் சொன்ன தகவலை நீ ஏன் அப்பா நரியை போல் வாழச் சொன்னதாகத் தவறாக நினைத்துக்கொண்டாய் என்று அறிவுறுத்தினார்.
- அன்புடன் R.P.OM

குடியை நிறுத்த முடியாதவர்கள்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமாமுனியே போற்றி என்ற இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் 30 நிமிடம் ஜெபித்து வந்தால் சத்தியமாக குடிப்பதை நிறுத்தி விடலாம்,இது அனுபவ உண்மை.குடும்பத்தோடு ஜெபித்து வந்தால் இன்னும் நல்ல பலஙள் எல்லாம் நடை பெறும்.திருவரங்கம் சென்று ஸ்ரீ ரங்கபெருமானையும் வழிபட்டால் இன்னும் சிறப்பு.

- அன்புடன் ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக